பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா ஜேர்மன் வாழ் ஈழத்து பெண்; ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ள பிக்பாஸ் 5 ரியாலிட்டி நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் புதியதாகவும் வித்தியாசமானதாகவும் டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில் தான் இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதியாக இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா ஆகியோர் குறைந்த வாக்குகளுடன் இருந்தார்கள்.

அவர்களில் மதுமிதா தான் குறைந்த வாக்குகளுடன் வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் உண்மையில் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிட் ஆகப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Contact Us