‘சிரம் பத்துடையான்’ முப்பாட்டன் இராவணனை நினைவூட்டும் பாடல்

நம் இலங்கையாண்ட இராவணேஸ்வரனை இப்போதும் பாடுவோம் என்று 21ம் நூற்றாண்டில் அதிரடியாக களமிறங்கியுள்ளார்கள் நம் ஈழத்து கலைஞர்கள். ஆம் கவிஞர் உமாகரன் இராசையாவின் அற்புதமான வரிகளிலும் அவரது இயக்கத்திலும் வெளிவந்துள்ள பாடல் தான் “இராவணன் காதலி”.

இப் பாடலை தன் இசையால் மெருகூட்டியுள்ளார் இசையமைப்பாளர் வெற்றி சிந்துஜன். இராவணனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு பெண்ணின் உருக்கத்திற்கு தன் குரலால் உருவம் கொடுத்து பாடியுள்ளார் பவனுஜா.

சொல்லாத காதலையும் தன் சொல்லிசையால் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் நம் ரத்யா.

மேலும் திரையில் தோன்றி இப்பாடலுக்கு உயிரூட்டியுள்ள நமது கலைஞர்களும் காட்சிகள் ஒளிப்பதிவினை மிக நேர்த்தியாக கையாண்டுள்ள ஒளிப்பதிவாளர் A.K.கமலும் இப் பாடல் படைப்பினை மிகச் சிறப்பாக முழுமைப்படுத்தியுள்ளார்கள்.

நம் முப்பாட்டன் இராவணனை நினைவூட்டும் விதமாக எழுந்த முயற்சியில் ஓர் காதல் காவியமாக வெளிவந்துள்ளது இந்த “இராவணன் காதலி” என்ற அருமையான பாடல்.

கேட்க கேட்க மனதை கொள்ளைக் கொள்ளும் இப்பாடலினை தற்போது Youtube வலைத்தளத்தினூடாக நீங்கள் பார்வையிட்டு மகிழலாம்:

Contact Us