கனடாவில் புலம்பெயர் தமிழனான ரமணன் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுக்கள்!!

 

36 வயதான ரமணன் பத்மநாதன் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை Toronto காவல்துறையினர் பதிவு செய்தனர். இணையவழி மூலம் குழந்தைகளிடம் ஆபாச புகைப் படங்களை பெற்ற குற்றச்சாட்டுக்களை இவர் எதிர்கொள்கிறார்.
கடந்த March மாதம் முதலில் கைது செய்யப்பட்ட இவர் மீது 25 குற்றச்சாட்டுக்கள் பதிவாகின இவர் மீதான தொடர்ந்த விசாரணையின் பின்னர் மேலும் 68 குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என கவலை வெளியிட்டுள்ள காவல்துறையினர், தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை அநாமதேயமாக அணுகுமாறு கோரியுள்ளனர்.இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us