தலீபான்களால் பணியை இழந்த பெண் பத்திரிகையாளர்கள்.. சாலையில் துணி வியாபாரம் செய்யும் அவல நிலை..!!

 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் கடந்த முறை போன்று தங்களின் ஆட்சி இருக்காது என்றும் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவோம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது எந்த பணிகளிலும் பெண்களை அனுமதிக்கவில்லை. மேலும், ஊடகங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதித்தார்கள்.

இதனிடையே அந்நாட்டின் பொருளாதாரம் ஒவ்வொரு நாளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பட்டினி, வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. மேலும், தலிபான்களின் ஆட்சியில் அதிகமான ஊடகங்கள் அடைக்கப்பட்டு விட்டது. பெண் பத்திரிகையாளர்கள் ஆயிரக்கணக்கில் பணியை இழந்திருக்கிறார்கள்.

அதன்படி, பர்ஜானா அயூபி என்ற பெண், பத்திரிகையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தலிபான்களின் ஆட்சியில் பணியை இழந்ததால், தன் குடும்பத்தை காப்பாற்ற காபூல் நகரின் சாலையோரத்தில் துணிகளை விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பில் அவர் அளித்துள்ள நேர்காணலில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அதிகமான ஊடகங்கள் அடைக்கப்பட்டன.

பெண் பத்திரிகையாளர்களுக்கு வேலை இல்லை. எனக்கு, என் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி இல்லை. எனவே, சாலையில் துணி வியாபாரம் செய்து வருகிறேன். இங்கு இருக்கும் பிரச்சனையை தீர்க்க, சர்வதேச சமூகம், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்

Contact Us