லண்டன் தமிழர்கள் இனி வீடு வாங்கலாம்: Bank Of England தனது கெடு பிடிகளை வெகுவாக குறைத்துக் கொண்டது !

பிரித்தானிய மத்திய வங்கி(Bank Of England) , அடுத்த மாதம் தொடக்கம் தனது கெடு பிடிகளை குறைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஒருவர் வேலை செய்கிறார் என்றால். அவர் வருடம் உழைக்கும் சம்பளத்தினை 4.5 மடங்கால் பெருக்கிப் பார்த்து, அதற்கு ஏற்ற பெறுமதியான வீட்டை தான் அவரால் வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் தற்போது உள்ள பணவீக்கத்தை குறைக்கவும். வீடுகளை பலர் வாங்க தூண்டும் வகையிலும், மத்திய வங்கி புது திட்டம் ஒன்றை அடுத்த மாதம் முன் வைக்க உள்ளது. அது என்னவென்றால்.. Source : Bank of England considering easing mortgage rules in move that could boost house prices:

ஒருவர் வருடம் ஒன்றுக்கு உழைக்கும் சம்பளத்தினை 5.5ல் பெருக்கி அதன் பெறுமதிக்கு அவர் வீட்டை வாங்க முடியும். உதாரணமாக ஒருவர் வருடத்திற்கு 30,000 ஆயிரம் பவுண்டுகளை சம்பாதிக்கிறார் என்றால், 30,000 X 5.5 = £165,000 பவுண்டுகள் பெறுமதியான வீட்டை அவரால் வாங்க முடியும். இந்த வகையில் பார்த்தால், கணவனும் மனைவியும் இணைந்து வீட்டை வாங்க முடியும். எந்த ஒரு ஏஜண்டையும் நீங்கள் பெரிதாக அணுகத் தேவை இல்லை. நேரடியாகவே உங்கள் வங்கியில் மோட் கேஜ் செய்ய முடியும். எனவே தமிழர்களே லண்டனில் வீடு வாங்க இது நல்ல தருணமாக உள்ளததோடு. வட்டி விகிதமும் குறைந்து இருப்பதால். முதலீடுகளை நீங்கள் செய்வது நல்லது.

Contact Us