“தீவிரவாத ஆதரவாளரை அமெரிக்க தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்!”.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தான் அரசு அமெரிக்க நாட்டிற்கான தூதராக மசூத் கானை தேர்தெடுத்திருக்கிறது. அமெரிக்காவுடன், பாகிஸ்தான் தன் உறவை மேம்படுத்த விரும்பும் ஒரு முக்கிய தருணத்தில் மசூத் கான், வாஷிங்டன் நகருக்கு பயணிக்கிறார். இவர் கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து 2012ஆம் வருடம் வரை சீன நாட்டின் தூதராக இருந்துள்ளார்.

அதன்பின்பு, கடந்த 2012ம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். மசூத் கான் முஸ்லிம்களுடன் மேற்கிலும், ஜிகாதிகளுடன் கிழக்கிலும் பணியாற்றிய நீண்ட வரலாற்றை உடையவர். இவர், ஹிஸ்புல் முஜாகிதீன் தவிர்த்து பிற தீவிரவாத அமைப்புகளை ஆதரித்து வந்தார்.

கடந்த 2019 ஆம் வருடத்தில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் காஷ்மீர் ஒற்றுமை மாநாட்டில் மசூத் கானும் இருந்துள்ளார். மேலும், ஹர்கத்-உல்-முஜாஹிதீன்-ன் நிறுவனரான பஸ்லுர் ரஹ்மான் கலீலுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையானது, இந்த அமைப்பை கடந்த 1997-ஆம் வருடத்தில் தீவிரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.

 

Contact Us