சகோதரியின் கலியாண வீட்டுக்கு லண்டனில் இருந்து கொழும்பு வந்த அன்ரி: அவுசியில் இருந்து வந்த வெறு ஒரு அங்கிள் இருவரும் மாயம்…

தனது சகோதரியின் திருமண வைபவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனிலிருந்து கொழும்பு வந்து தங்கியிருந்த 43 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயார் கொழும்பில் மாயமாகியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதே கலியாண வீட்டுக்கு மாப்பிளையின் தாயின் தம்பியான 46 வயதான அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த வவுனியா அங்கிளும் அதே நாள் மாயமாகி விட்டார். இது கோட்டபாயவின் வெள்ளை வேன் கடத்தல் என்று எல்லாம் நினைத்து விட வேண்டாம்… மக்களே… இவர்கள் இருவரும் ஒன்றாக கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக அவுஸ்ரேலிய அங்கிளின் நெருங்கிய நண்பர் ஒருவர் உறவினர்களிடம் தகவல் கொடுத்துள்ளார்.

இவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் முறைப்பாடு பதியப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. காணாமல் போன அன்ரி மற்றம் அங்கிளுக்கு 18 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன கொடுமை சரவணா ? கல்யாண வீட்டிற்கு வந்து , இப்படி கள்ளத் தொடர்பில் ஓடிப் போய் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்களே ? இது தொடர்பாக பல திடுக்கிடும் சம்பவங்கள் உள்ளது. அது விரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாகும்.

Contact Us