கணவனோடு சென்ற காதலி -துப்பாக்கியுடன் சென்ற காதலன் -அடுத்து நடுரோட்டில் நடந்த கொடூரம் .

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் 19 வயது இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் ரஜ்னீஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தார் .அவர்களின் காதல் அந்த பெண்னின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் அந்த பெண்ணை கண்டித்து அந்த காதலன் ரஜ்னீஷை மறந்து விடுமாறு கூறினார் .அதை கேட்ட அந்த பெண் பெற்றோரின் பேச்சை கேட்டு அந்த காதலனிடம் இனி தன்னை பார்க்க வரக்கூடாது என்று கூறிவிட்டார் .

அதை கேட்ட அந்த 19 வயதான காதலன் ரஜ்னீஷ் அந்த பெண்ணை பழி வாங்க காத்து கொண்டிருந்தார் அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அவரின் பெற்றோர் வேறொரு இடத்தில ஒரு மாப்பிளையை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டனர் .அதனால் அந்த காதலன் ரஜ்னீஷ்க்கு அந்த பெண் மீது இன்னும் கோபம் அதிகமானது

இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் தனது சகோதரனுடன் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த காதலன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரை துப்பாக்கியால் நெஞ்சிலும் ,கழுத்திலும் சுட்டு கொன்று விட்டு ஓடி விட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் தந்ததும் அந்த காதலன் ரஜ்னீஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

Contact Us