“கர்ப்பத்தை கலைச்சிட்டு வா கட்டிக்கிறேன்” -மாடல் அழகிக்கு நேர்ந்த கொடுமை .

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியின் ஒரு வாலிபர் மேனேஜராக பணியாற்றினார் .அந்த நபருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு மாடலிங் செய்யும் பெண்ணுக்கும் சமூக ஊடகத்தின் மூலம் காதல் உருவானது .பின்னர் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான தேதியாக நவம்பர் 29ம் தேதியை முடிவு செய்தனர் .

அதற்குள் அந்த பார் மேனேஜர் அந்த மாடலிங் பெண்ணை அனுபவிக்க ஆசைப்பட்டார். அதனால் அவர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு காலியாக இருக்கும் வீட்டிற்கு கல்யாணம் பற்றி பேசலாம் என்று பொய் சொல்லி வர சொன்னார் .

அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவர் சொன்ன அந்த காலியான வீட்டுற்கு சென்றார் .ஆனால் அந்த வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார் .,அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணை அந்த வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அந்த பெண் கர்ப்பமானார் .அதனால் வாலிபர் அந்த பெண்ணிடம் இந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டு வா உன்னை கட்டிக்கிறேன் என்று கூரினார் .ஆனால் அந்த பெண் அவரின் பேச்சை நம்பாமல் கல்யாணம் செய்ய வற்புறுத்தினார்.

ஆனால் அந்த வாலிபர் மறுத்ததால் அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us