தொடரும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்…. பலியான அப்பாவி பொதுமக்கள்…. பொறுப்பேற்காத பயங்கரவாத இயக்கங்கள்….!!

ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். மேலும் அவர்களின் ஆட்சியில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் வடக்கு பகுதியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இதனை செய்தியிருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Contact Us