‘படகுகள் விற்பனை செய்யமாட்டோம்’…. புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு…. பிரபல நிறுவனம் தகவல்….!!

பிரித்தானியாவிற்குள் புலம்பெயர்வோர் பிரான்சில் இருந்து படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உள்ளே நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் படகுகளை பயன்படுத்துகின்றனர். அந்த படகுகளில் Decathlon என்னும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் படகுகளும் காணப்படுகிறது. இவைகள் படகுப்போட்டிகளுக்காக தயாரிக்கப்படுகின்றன.

இவற்றை புலம்பெயர்வோர் வாங்கி அதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வடக்கு பிரான்சில் உள்ள கடைகளுக்கு படகுகள் விற்பனை செய்யப்போவதில்லை என Decathlon நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, புலம்பெயர்வோர் வாங்கப்படும் படகுகள் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதனை விற்பனை செய்யப்போவதில்லை என்று முடிவு செய்து உள்ளோம் என Decathlon நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் எங்களின் தயாரிப்பு ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியேற்றுள்ளனர். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை மட்டும் குறைந்தது 1,185 பேர் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர். மேலும் சிலர் பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் போது கடலில் மூழ்கி மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us