வெளிநாடொன்றில் இலங்கை மாணவியின் புதிய கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுவரும் இலங்கை மாணவி ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இலங்கை பெண்ணான பிரபானி ரணவீர (Prabhani Ranaweera) என்பவரே இவ்வாறு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

குறித்த இலங்கை மாணவி உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட துப்பாக்கி குண்டு துளைக்காத மூன்று உலோகத்தினாலான கவச உடையை உருவாகியுள்ளார்.

மேலும், தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்ய அவர் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சிக்காக இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்.

இதேவேளை, தம்மால் தயாரிக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட துப்பாக்கி குண்டு துளைக்காத உடை, போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது என்பதை தனது ஆராய்ச்சியில் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மாணவி பிரபானி ரணவீர தெரிவித்துள்ளார்.

மேலும், உடையின் எடையை குறைக்க உருக்கு தவிர, டைட்டானியம் மற்றும் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த கண்டுபிடிப்பு, தாக்குதலின் பின்னர் இருக்கும் மன உளைச்சலை 80 சதவீதம் வரை குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us