களவாக அகதிகள் பிரான்சில் இருந்து படகில் வெளிக்கிட கை தட்டி பிரிட்டன் அனுப்பி வைத்த பிரான்ஸ் பொலிஸ்

நவம்பர் மாதம் மட்டும், இந்த 19 நாட்களில் சுமார் 1,000 அகதிகள், பிரான்ஸ் கலையில் இருந்து அல்லது டங்-கேர்க் கடல் மூலமாக டோவர் வந்தடைந்துள்ளார்கள். அதுவும் காற்று நிரப்பப்பட்ட படகில் என்பது மிகவும் அதிர்ச்சியான விடையம். இதனை அடுத்து பிரித்தானியா சில, உளவுப் பிரிவினரை பிரான்சுக்கு அனுப்பி அங்கே என்ன நடக்கிறது என்று ஆராயச் சொல்லியுள்ளது. அவர்கள் கொடுத்துள்ள தகவல் பிரித்தானியாவை ஆட்டம் காணவைத்துள்ளது. அதாவது கலை என்னும் இடத்தில் உள்ள கடல் கரையில் சுமார் 40 அகதிகள் படகு ஒன்றை கொண்டு வந்து அதில் காற்றை நிரப்பியுள்ளார்கள். அவர்கள் அருகே பிரான்ஸ் பொலிசார் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை தடுக்கவில்லை. அவர்கள் களவாக கடல் மார்கமாக, பிரித்தானியா செல்ல ஆரம்பிக்கிறார்கள்… படகில் ஏறியதும்…

பிரான்ஸ் பொலிசார் கை தட்டி ஆரவாரம் செய்து, அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்சையைக் கிளப்பி உள்ளது. இதுவரை 56 மில்லியன் யூரோகளை பிரித்தானியா பிரான்சுக்கு வழங்கியுள்ளது. கலையில் உள்ள அகதிகள் பிரித்தானியா வருவதை, பிரான்ஸ் கரையோர காவல் பிரிவினர் தடுப்பார்கள் என்ற உறுதி மொழியை பிரான்ஸ் வழங்கியே இந்த பணத்தை பெற்றுக் கொண்டது. ஆனால் பணத்தையும் வாங்கி விட்டு, ஆட்டு மந்தையை திறந்து விட்டது போல அகதிகளை அப்படியே பிரிட்டனுக்குள் அனுப்பி வைக்கிறது பிரான்ஸ். இதில் வேதனையான விடையம் என்னவென்றால், சிரியா, ஆக்பானிஸ்தான், ஈரான், ஈராக், என்று அனைத்து அகதிகளும் முஸ்லீம்கள். இவர்களில் யார் தீவிரவாதி ? உண்மையான அகதிகள் யார் என்று ..

பிரித்தானியாவால் எப்படி அடையாளம் காண முடியும் ? இதுவே பிரித்தானியாவின் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆனால் விரைவில் ஒரு பெரும் தீர்வை உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் எட்டவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

Contact Us