பாலத்தில் தொங்கவிடப்பட்ட…. ஆண் சடலங்கள்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தங்களது விரோதிகளுடன் சில சமயம் மோதிக்கொள்ளும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தற்பொழுது பாலத்தில் தொங்கவிட்டபடி ஒன்பது ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் உடலானது நெடுஞ்சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த கொலைகள் அப்பகுதியில் செயல்படும் ரவுடி கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாத நிலவரப்படி இந்த ஆண்டு இது போன்ற வன்முறை சம்பவங்களால் மொத்தம் 21,495 பேர் இறந்துள்ளனர். அதிலும் சராசரியாக மாதத்திற்கு 2400 பேர் உயிரிழக்கின்றனர் என்று மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.

Contact Us