தாமரை வைத்து பிரியங்காவின் மூக்கை உடைத்த கமல்.. கூட்டு சேர்ந்த நிரூப்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 50 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், போட்டியானது நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பெரிதும் விமர்சிக்கப்பட்ட அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டு மீண்டும் தற்போது வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

ஆகையால் இவருடைய வருகையால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு நிகழும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் பிரியங்காவை தாமரையுடன் ஒப்பிட்டு பெரிதும் விமர்சித்தா.ர்

ஏனென்றால் இந்த வாரம் நடந்து முடிந்த ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க்கில் பிரியங்கா தாமரையை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை காட்டமாக பதிவிட வேண்டும், பிரியங்கா அவ்வாறு செய்யாமல் தாமரையை குளிர்விக்கும் படி பேசி சமாளித்து விட்டார்..

இதை விரும்பாத கமல், விளையாட்டை தெளிவாக விளையாடும் பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இடையில் நுழைந்த தாமரை, பிரியங்காவின் இடத்தில் நான் இருந்திருந்தால் பிரியங்காவை பற்றி காட்டமாக விமர்சித்ததிருப்பேன் என்று கமல் முன்பே சொல்லி அதை செய்தும் காட்டி விட்டார்.

அதன் பிறகு பிரியங்கா விளையாட்டில் ஒரு சில இடங்களில் தெளிவாக விளையாட தவறி விட்டீர்கள் என்று கமல் பிரியங்காவை சுட்டிக்காட்டினார். அதேபோன்று நிரூப் பிரியங்காவை பற்றி தாறுமாறாக கமலிடம் விமர்சித்தார்.

பிரியங்கா ஒரு பிரச்சினை நடந்திருந்தால் அதை ஊதி பெரிதாக்கும் சுபாவம் கொண்டவர் என்று நிரூப், கமல் முன்பே கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் பிரியங்கா நிரூப்பிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு நேற்றைய நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கமல் மற்றும் நிரூப் இருவரும் மாறி மாறி பிரியங்காவின் மூக்கை உடைத்து விட்டனர். எனவே வரும் வாரத்தில் பிரியங்கா சுதாரித்துக்கொண்டு தெளிவாக விளையாடுவார் என்று கமல் உட்பட ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Contact Us