2006-லயே தமிழில் ஹீரோயினா நடிச்ச பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. இதைப் பற்றி மூச்சு விடலயே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளரான அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்னொரு Wild-card Entry இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த சீசன் இதுவரை பெரிய அளவு சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருந்தாலும் அதில் அக்ஷரா ரெட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் இவருக்கு கண்டிப்பாக ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரும்.

ஆனால் அக்ஷரா ரெட்டி கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வந்தது. 2006 ஆம் ஆண்டு புதுமுக நடிகர்களுடன் ஜோடியாக தீண்ட தீண்ட என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவ்வளவு ஏன் கடந்த 2013ஆம் ஆண்டு கேரளாவில் நகை கடத்தலில் ஈடுபட்ட நடிகைகளில் முக்கிய குற்றவாளியாக அக்ஷரா ரெட்டிசேர்க்கப்பட்டார் எனவும் அது குறித்த விசாரணைகள் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தற்போது வரை அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என போராடிக்கொண்டிருக்கிறார் அக்ஷரா.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான வரும் என்பவருடன் காதலில் விழுந்து விட்டதாகவும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த படத்தில் நடிக்கும்போதே பார்ப்பதற்கு பருவப்பெண் போல் இருக்கும் அக்ஷரா ரெட்டிக்கு இப்போது என்ன வயசு இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Contact Us