யாழில் மாவீரர் நாள் தொடர்பில் பொலிஸாரிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவீரர்களை நினைவு கூருகின்ற மாவீரர் நாள் நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்க கோரி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரியே மல்லாகம் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆலய மதகுருமார்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி மணிவண்ணன் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா சட்டத்தரணி திருக்குமரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Contact Us