“அடிக்கடி அரை நிர்வாணமா வந்து அதிர்ச்சி கொடுக்கறியே” -77வயது ப்ரின்சிபாலை ஏமாற்றிய பெண்

மும்பையில் உள்ள ஓய்வு பெற்ற 77 வயதான கல்லூரி முதல்வர் ஒருவர் தனது குடும்பத்துடன் ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்றிருந்தார் .அந்த பிரின்சிபால் என்னேரமும் சமூக ஊடகத்தளத்தில ஆக்டிவாக இருப்பது வழக்கம் .அப்போது ஒரு பியூட்டி பார்லர் நடத்தும் ஒரு பெண் அவருக்கு பேஸ் புக்கில் நட்பு கொண்டு அவரின் போன் நம்பரை வாங்கி கொண்டார்.

அதன் பிறகு அந்த பெண் அந்த ப்ரின்சிபாலுக்கு அடிக்கடி இரவு நேரங்களில் வீடியோ காலில் அரை நிர்வாணமாக வந்து அவரோடு ஆபாசமாக பேசி வந்தார்.அந்தப் பெண் ஓரளவு நிர்வாணமாக இருந்ததால், அந்த பெண்ணின் அழைப்பைத் துண்டித்து விட்டார் . அப்போது அந்த பெண் தனது மொபைல் பில்லுக்கு ரூ.249 அனுப்புமாறு கூறியதையடுத்து அந்த நபர் அனுப்பினார் .ஆனால் அதன் பிறகு அந்த பெண் அவருடன் பேசிய அந்த வீடியோ காலை ரெக்கார்ட் செய்து வைத்து கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டினார்.

ஆனால் அதற்கு அந்த பிரின்சிபால் பணியாமல் இருந்ததால் அந்த பெண் அந்த வீடியோவை அவரின் குடும்பத்தினருக்கு அனுப்புவதாக மிரட்டி தொல்லை கொடுத்தார் .இதனால் பயந்து போன அந்த முன்னால் பிரின்சிபால் அந்த பெண் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை விசாரித்து வருகின்றனர்.

Contact Us