பிச்சை எடுக்கும் மூதாட்டியை தூக்கி சென்று வன்கொடுமை… மதுரை வாலிபரின் கொடூரம்..! சிசிடிவியில் பகீர்

மதுரை சோழவந்தானில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை. மடக்கிபிடித்த போலீசார் பரபரப்பு சி.சி.டிவி காட்சிகள் வெளியீடு, வாலிபர் கைது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்கெட்ரோடு பகுதியை சேர்ந்தவர் 75 வயதான மூதாட்டி. இவர் சோழவந்தான் கடைவீதிகளில் யாசகம் பெற்று அப்பகுதியில் உள்ள கடை முன் இரவு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு மூதாட்டி கடை முன் தூங்கியபோது சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்ற வாலிபர் மதுபோதையில் மூதாட்டியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். அப்போது மூதாட்டி திடுக்கிட்டு எழுந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூதாட்டியை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சோழவந்தான் காவல் நிலையத்தில் கண்காணித்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று வாலிபரை மடக்கிபிடித்து கைது செய்தனர். இதில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்ப முயன்றதை வாலிபர் ஒப்புக்கொண்டார்.

 

இதனை தொடர்ந்து வாலிபர் மணிமாறனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிமாறன் மீது இரு கொலை வழக்கு உட்பட 6 வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து கடந்து 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த மணிமாறன் இளம்பெண் தூங்குவதாக நினைத்து மூதாட்டியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்து தற்போது மீண்டும் கம்பி எண்ணுவதற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us