தன்னை தானே திருமணம் செய்த பெண்…. திடீரென எடுத்த முடிவு…. ஆச்சரியப்படுத்தும் சம்பவம்….!!

பிரேசில் நாட்டில் Cris Galera என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடல் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் காதல் தோல்வி அடைந்த Cris Galera விரக்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இது உலகளவில் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பேசப்பட்டது. இதுகுறித்து Cris Galera கூறியதாவது “தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய நான் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலையில் திருமணம் முடிந்த 90 தினங்களில் தன்னை தானே விவாகரத்து செய்வதாக ஒரு அறிவிப்பு வெளியாகியது.

அதாவது எனக்கு தற்போது மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. இதனால் நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துள்ளேன். அதற்கு பின்புதான் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் வந்தது. இந்நிலையில் தன்னை தானே நான் விவாகரத்து செய்கிறேன்” என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. எனினும் விவாகரத்து செய்துகொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் Cris Galera குறிப்பிட்டுள்ளார்.

Contact Us