தீயில் எரிந்து இளம் குடும்பப் பெண் சாவு!- வவுனியாவில் பரபரப்பு!

தீக்காயங்களுக்கு உள்ளான இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவித்தன.

மன விரக்தியில் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து மூட்டிய பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூன்றரை வயது குழந்தையின் தாயே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கொள்ளை விளாங்குளம் வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சித்திரசீலன் டிலோஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

குறித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் இவருடன் பேசுவதில்லை என்ற மன விரக்தியில் இவர் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

முதலில் அவர் மல்லாவிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது.

Contact Us