டபுள் டபுளா பேசி.. அங்காங்கே தொட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரை தூக்கிய போலீஸ்.!

தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடவுளாக இருக்கக்கூடிய ஆசிரியர்களே தொடர்ந்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாணவி மற்றும் கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஈரோட்டில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உயிரியல் ஆசிரியர் திருமலைமூர்த்தி என்பவர் கைது போச்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடவுளாக இருக்கக்கூடிய ஆசிரியர்களே தொடர்ந்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாணவி மற்றும் கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஈரோட்டில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுல்லிப்பாளையம் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் திருமலை மூர்த்தி (49). இவர், பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 உயிரியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமலை மூர்த்தி பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், மாணவிகளை தொட்டு பேசுவதும், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை நடனமாடச் சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமலைமூர்த்தி மீது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர். மேலும், ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கும் படி காவல் துறைக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், திருமலைமூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் திருமலைமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோபி மாவட்ட சிறையில் ஆசிரியர் திருமலை மூர்த்தி அடைக்கப்பட்டார்.

Contact Us