நடிகர் கமலின் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை (மருத்துவமனை அறிக்கை இணைப்பு)

 

 

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் என்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக சமீபத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உண்டான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கமல்ஹாசன் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us