“கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படும் பீட்சா!”…. தாய்லாந்தில் விற்பனைக்கு வருகிறது….!!

 

தாய்லாந்து நாட்டில் முக்கியமான துரித உணவுகளில் ஒன்றாக இருக்கும் “கிரேசி ஹேப்பி பீட்சாவில்” தற்போது அதிகாரப்பூர்வமாக கஞ்சாவை சேர்த்து தயாரிக்கின்றனர். இது தொடர்பில் பீட்சா நிறுவன பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியிருப்பதாவது, நாட்டிலிருக்கும் அனைத்து பீட்சா நிறுவன கிளைகளிலும் இந்த கிரேசி ஹாப்பி பீட்சா விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், அதிக அளவில் விற்பனை ஆகவில்லை. எனவே இந்த பீட்சாவுடன் கஞ்சா சேர்க்கப்படுகிறது. அதனை சாப்பிடும் போது சிறிது தூக்கம் வரும். நாங்கள் சந்தையில் புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கஞ்சா இலையை நன்கு வறுத்து இந்த பீட்சாவின் மீது தூவி, அதனுடன் பாலாடைக்கட்டி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதன் விலை 1123 ரூபாய். தாய்லாந்து நாட்டில் கஞ்சா வைத்திருப்பது சட்டப்படி குற்றம். எனினும் அந்நாட்டில், போதை பொருட்கள் தொடர்பான சட்டங்கள் சமீபத்தில் மாற்றப்பட்டது.
ஆனால் கஞ்சா வைத்திருக்கும் நபர்களுக்கு அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். எனினும் ஒரு நபர், தனது சொந்த விற்பனைக்காக குறைந்த அளவில் கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Contact Us