ஹாஸ்பிட்டலில் இருந்து கமல் வெளியிட்ட வீடியோ.. ராஜமாதாவால் சமாளிக்க முடியுமா?

 

பலரும் எதிர்பார்த்து வந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் பேசுகிறார்.

கமல் மருத்துவமனையில் இருந்து பேசுவதை கண்ட போட்டியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். அவர்களிடம் கமல் மக்களுக்காக மருத்துவமனை டிவியிலிருந்து உங்களிடம் பேசுவது உங்கள் நான் என்று கூறுகிறார்.

மேலும் தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுகிறார்.

அப்பொழுது அசத்தலாக ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி கொடுக்கிறார். அவரை கமல் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி வரவேற்கின்றனர் இவ்வாறு ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பற்றி பல்வேறு வதந்திகள் வந்தாலும் இறுதியில் நாம் யோசித்தபடி ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ப்ரோமோவிற்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பிக்பாஸ் சீசன் வரலாற்றிலேயே அதிக முறை பார்த்த பிரோமோ இதுவாகத்தான் இருக்கும்.

இன்று ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை எப்படி நடத்தப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் மட்டுமல்ல போட்டியாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அப்படியே விட்டுவிடாமல் மக்கள் முன் தோன்றி காட்சி அளிக்கும் கமல் சாருக்கு அனைவரும் பாராட்டை தெரிவிக்கின்றனர்.

அவர் உடல் நலம் தேறி விரைவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

<iframe width=”600″ height=”450″ src=”https://www.youtube.com/embed/jvVL2nt2d04″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Contact Us