பிக்பாஸ் மீது அம்புட்டு லவ்வா? வனிதாவின் வேற லெவல் ஃபேஷனை பார்த்து பிரமித்து போன நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss Show) மூலம் மீண்டும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்க துவங்கியுள்ள வனிதா (Vanitha) பிக்பஸ்ஸை மறக்காமல் செய்துள்ள ஒரு காரியம் நெட்டிசன்களையே பிரமிக்க செய்துள்ளது.

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar), சமீபத்தில் புதிய தொழிலை தொடங்கிய நிலையில் (Started new business). இதுகுறித்தபுகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் செலியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மீண்டும் திரையுலகிலும், சின்னத்திரையுலும் பிஸியாகியுள்ள வனிதா, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், தன்னுடைய புது புது ஃபேஷன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பிக்பாஸ்சை மறக்காமல், தன்னுடைய கழுத்தின் BB கண் வடிவிலான பென்டென்ட் ஒன்றை அணிந்துள்ளார்.

இந்த பென்டென்ட் தெரியும்படி விதவிதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு நெட்டிசன்களையும் பிரமிக்க வைத்துள்ளது.

பலர் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது உங்களுக்கு அவ்வளவு லவ்வா? என்றும் பிபி பென்டென்ட் மிகவும் அழகாக இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

இதை தவிர இதுவரை திரைப்படங்களில் காணாத அளவிற்கு புது விதமான காதணி, போன்றவை அணிந்து புகைப்படம் வெளியிட்டு அலப்பறை செய்து வருகிறார்.

பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு, தற்போது வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது. ஒரு தனி பெண்ணாக நின்று இவர் செய்து வரும் தொழில் வெற்றியடையவும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Contact Us