தைரியம் கொள்… 10ம் வகுப்பு மாணவியின் துணிச்சலால் கம்பி எண்ணும் அவசர மாப்பிள்ளை

பள்ளி மாணவியை திருமணம் செய்த மாப்பிள்ளை உட்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், காடையம்பட்டி அடுத்த ஜோடுகுழியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில், 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து தெரிந்த அவரது பெற்றோர் அதிச்சியடைந்தனர்.

இதனையடுத்து பெற்றோர் அவரது உறவினர் ஒருவரை அவசர அவரமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவருக்கும் பள்ளி மாணவிக்கும் கடந்த,15 ம் தேதி வீட்டில் வைத்து திருமணம் முடித்தனர்.

இது குறித்து அந்த மாணவி குழந்தை தடுப்பு பிரிவிற்கும், மகேந்திரமங்கலம் போலீசாருக்கு கடந்த 21 ஆம் தேதி தகவல் அளித்தார். அதன் பேரில், அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் மகேந்திரமங்கலம் போலீசார் குழந்தை திருமணம், போக்சோ வழக்கில் கார்த்திக், அவரது தாயார் செல்வி (42). மாணவியின் தாயார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Contact Us