நிரூப்பை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்.. ஜெயிலுக்கு அனுப்பிய தரமான சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் ரெட் டிவி அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பிறகு இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யமில்லாத நபர்களாக யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்கிறார்.

அதற்கு அனைவரும் சேர்ந்தாற் போல் நிரூப் மற்றும் பவானி பெயர்களை கூறுகின்றனர். நிரூப்பின் நெருங்கிய தோழியான பிரியங்காவும் அவரின் பெயரை சொல்கிறார். இதைப்பற்றி கிச்சன் ஏரியாவில் நிரூப் உட்பட அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது நடக்கும் வாக்குவாதத்தில் பிரியங்கா, நிரூப்பிடம் உன்னையே நீ அசிங்கப்படுத்திக்காத என்று சொல்கிறார். அதற்கு நிரூப் நான் அசிங்கப்படுரேனா இல்ல நீ அசிங்கப்படுறியா என்று பார்ப்போம் என்கிறார். அப்போ போய் ஜெயில்லயே உட்காரு என்று சொல்லி விட்டு அந்த இடத்தை காலி செய்கிறார் பிரியங்கா.

பிறகு பிக்பாஸ் கட்டளைப்படி பாதாளச் சிறைக்குள் பவானி மற்றும் நிரூப் இருவரும் செல்கின்றனர். அங்கு இருக்கும் பவானியிடம் நிரூப் பிரியங்காவை பற்றி குறை கூறுகிறார். மேடையில் இருக்கும் பொழுது ஒருவரை நன்றாக திட்டி விட்டு அதன் பிறகு வந்து கட்டி பிடித்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார்.

பிரியங்காவை பற்றிநிரூப் கேட்கும் என்று கேள்வி நியாயமான ஒன்று. ஏனென்றால் பிரியங்கா யாருடன் சண்டை போட்டாலும் சிறிது நேரத்திலேயே அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானப்படுத்துகிறார். தாமரை விஷயத்தில் நாம் இதை பல முறை பார்த்திருக்கிறோம். இது எதிராளிக்கு மிகுந்த குழப்பத்தை கொடுக்கும். இதன் மூலம் அவர் தனக்கு எதிராக யாரும் உருவாகாமல் பார்த்துக் கொள்கிறார்.

இதுவும் விளையாட்டின் ஒரு வகை யுக்தி ஆகும். வீட்டில் எவ்வளவு சண்டை நடந்தாலும் உடனே அதை மறந்துவிட்டு நட்பாக பழகுகிறார் என்ற ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்க பிரியங்கா முயற்சி செய்கிறார். அவரின் இந்த யுக்தி மக்களிடம் செல்லுபடியாகுமா என்று போகப் போக தெரிந்து விடும்

 

Contact Us