நான் படு Strong: ஏன் கொரோனா ஊசி எடுக்கவேண்டும் என்ற இளம் குத்துச் சண்டை வீரரை கொரோனா தாக்கி இறுதியில் இறந்து விட்டார் !

எனது உடலில் நல்ல பலம் இருக்கு. நான் ஒரு குத்துச் சண்டை வீரர்.. எத்தனை வீரர்களை வென்று இருக்கிறேன். நான் ஏன் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு. கொரோனா தடுப்பூசியை எடுக்க வில்லை இந்த 41 வயதாகும் சினஸ்டார் என்னும் நபர். ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இவரை கொரோனா தாக்கிய நிலையில். கடைசி 10 நாட்கள் அவர் வைத்தியசாலையில் மூச்சு எடுக்க கஷ்டப்பட்டு. இறுதியாக நேற்றைய தினம் பரிதாபமாக இறந்துள்ளார். இவரை கொரோனா தாக்கிய வேளை. நல்ல உடல் நிலையில் தான் சினஸ்டார் இருந்துள்ளார். அதிலும் உயர் ரத்த அழுத்தம் சக்கரை வியாதி என்று, இவருக்கு எந்த ஒரு வியாதியும் இல்லை. ஆனால் கொரோனா வைரசை இவரது உடலால் எதிர்த்துப் போராட முடியவில்லை என்பது பெரும் துன்பமான செய்தி.

Contact Us