தன்னை விட இரண்டு வயது அதிகம் என்பதால் புதுப்பெண்ணை கொன்ற கணவன்

திருமணத்திற்குப் பிறகு மனைவி தன்னை விட இரண்டு வயது அதிகம் என்பதாலும் திருமணம் செய்து இரண்டு மாதம் ஆகியும் கர்ப்பம் ஆகாததாலும் ஆத்திரத்தில் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று இருக்கிறார் கணவர். மதுரை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

மதுரையில் எல்லீஸ் நகரில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையை சேர்ந்த சுதாவுக்கும் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் தாய், சகோதரர்களுடன் ஒரே வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார் நாகவேல். திருமணத்திற்குப் பின்னர் தன்னைவிட சுதா வயதில் மூத்தவர் என்பது தெரியவந்திருக்கிறது . இதனால் சுதாவுக்கும் நாகவேலுவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியும் சுதா கர்ப்பம் ஆகாததால் குடும்பத்தில் அது குறித்த சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது . இதையடுத்து சுதா தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று நாகவேலிடம் வலியுறுத்தி இருக்கிறார். தனி குடுத்தனம் பிரச்சனையாலும் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

நேற்று இரவும் சுதா தனிகுடித்தனம் பேச்சை எடுத்தபோது நாகவேல் -சுதா இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. நாகவேல் சுதாவின் கழுத்தைப் பிடித்து ஆத்திரத்துடன் நெரித்திருக்கிறார் . அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு சுதா உயிரிழந்திருக்கிறார்.

நடந்த கொலையை மறைக்காமல் நான் நேரடியாகவே எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து இருக்கிறார் மனைவி சுதாவை ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து அவர் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் கொலை செய்ய முயற்சி நோக்கத்தில் கழுத்தை நெரிக்கவில்லை. தகராறில் ஆத்திரத்தில் கழுத்தை பிடித்து விட்டேன். ஆனால் அதனால் உயிர்போகும் அளவுக்கு நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி கண்கலங்கி இருக்கிறார்.

அவரிடம் வாக்குமூலம் பெற்றதை அடுத்து மதுரை தெற்கு கமிஷனர், திடீர்நகர் உதவி கமிஷனர் இருவரும் சுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Contact Us