கிரிக்கெட் மட்டையால் மனைவியை கொன்று தலையணையால் மகன்களை கொன்று வங்கி அதிகாரியும் தற்கொலை

 

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு இரு குழந்தைகளையும் தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையை அடுத்த பெருங்குடியில் நடந்து இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதற்காக அவர் சென்னை அடுத்த பெருங்குடியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு தாரா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர். மணிகண்டனுக்கு சில வருடங்களாகவே கடன் பிரச்சனை இருந்துள்ளது. 15 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த இரண்டு மாதங்களாக வங்கிப் பணிக்கு சரியாக செல்லாமல் இருந்திருக்கிறார்.

இதனால் குடும்பத்தில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று கணவன்- மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது ஆத்திரத்தில் மணிகண்டனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார். இரண்டு மகன்களையும் தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இன்று காலையில் மணிகண்டன் வீட்டு கதவு திறக்காததால் யாரும் வீட்டுக்கு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தில் கதவை தட்டி பார்த்து யாரும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது நான்கு பேரும் சடலமாக கிடந்த இருக்கிறார்கள். இதன் பின்னர் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் விரைந்து வந்து நான்கு உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Contact Us