காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி, 15 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை!!

 

சென்னை காசிமேட்டில், 15 வயது சிறுமியை காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன், இவர் குடும்பத்துடன் சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகர் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அவரது 15 வயதுடைய மகள் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி எட்டாம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார். முருகனின் உறவினரின் சந்துரு என்ற நபரை 15 வயது சிறுமி காதலித்ததால், இதனை அறிந்த பாட்டி சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து தந்தை வீட்டுடன் விட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமி ஒரு வாலிபரை காதலித்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரத்தில் சிறுமி இருப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் போலீசார், சிறுமியை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு வீட்டிலிருந்த பாட்டியிடம் எனது மகள் என்றும், இவர் ஒருவரை காதலிப்பதாகவும் சொல்லி பாதுகாப்பிற்காக தான் இங்கு அழைத்து வந்து அன்றிரவே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் சிறுமி கூறியுள்ளார். பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பர் வீட்டில் அவரது மனைவியிடம் இவள் என் மகள் காதல் வயப்பட்டு விட்டார், அதனால் இரண்டு மூன்று நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என கூறிவிட்டு அங்கேயே விட்டு வந்துவிட்டார். நண்பரின் மனைவி அந்தப் சிறுமியிடம் விசாரிக்கவே சிறுமி உண்மையை கூற அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சென்னைக்கு அழைத்து வந்தனர்

இதனையடுத்து அச்சிறுமியை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் வெங்கடேசனை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெங்கடேசனுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வெங்கடேசனின் மனைவி நான்காவதாக 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

Contact Us