வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்த நபர் அதிரும் காட்சிகள் இவை தான்…

ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சில அங்குல தூரத்தில் ஒரு நபர் மரணத்தில் இருந்து தப்பிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தண்டவாளத்தில் ரயில் வேகமாக வந்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ரயில் அருகில் நெருங்கி வருவதை பார்த்த அந்த நபர், தண்டவாளத்தில் வந்து படுத்துக் கொண்டார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுனர் அவசரத்திலும் தனது விவேகமான செயலால், அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த வீடியோ மும்பையில் உள்ள ஷிவ்டி ஸ்டேஷனில் இருந்து எடுக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் (CCTV Camera) பதிவாக காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us