பிணையில் வந்த உதயன்: வேறு ஒரு 13 வயது சிறுமியைக் கூட்டிக் கொண்டு மாயமான கதை… இவர் தான்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 07ஆம் திகதி அன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் உதயன் (வயது 24) என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் 08ஆம் திகதி சிறுமியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறுமியை கடத்தியதாக கூறப்படும் செல்வநாயகம் உதயன் என்பவர் ,கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு. பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். எந்த ஒரு நாட்டில் சிறுமியை கற்பழித்த நபருக்கு பிணையில் விடுதலை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இன்று பாருங்கள் மற்றுமொரு 13 வயது சிறுமிக்கு…

ஆசை வார்த்தை பேசி, காதலிப்பதாக கூறி அவரையும் கடத்திச் சென்று விட்டார். ஆனால் இச்சிறுமி கடத்தப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் மூதூர் பொலிஸாரினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். உதயனுக்கும் பொலிஸ் நிலையத்திற்கு என்ன தொடர்பு இருக்கிறது என்பது தான் தெரியவில்லை. முன்னைய வழக்கிலும் இவர் திடீரென பிணை பெற்றுச் சென்று, பின்னர் மாயமாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

Contact Us