மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி எல்லைக்குட்பட்ட கருப்பண்ண காட்டுவளவு விருதாசம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் வீரமணி. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர்.

வீரமணிக்கு திருமணமான நிலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3 மாதத்துக்கு முன்பு தந்தை ராஜேந்திரன் மருமகளிடம் தவறான முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. இந்த நிலையில், வீரமணியின் வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் மனைவி லட்சுமியையும் மருமகளையும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது

 

அதற்கு மகன் இதுபோன்ற வார்த்தைகளை பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மகன் வீரமணியை வீட்டில் இருந்த கொடு வாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற வீரமணி தந்தை ராஜேந்திரனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நங்கவள்ளி காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் ‘தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதால் கொலை செய்தேன்’ என வாக்குமூலத்தில் வீரமணி தெரிவித்துள்ளார். மருமகளிடம் தவறாக நடக்க முயன்ற மாமனார் மகன் கையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Contact Us