மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அக்ர்வால்! அதுவும் நம்ம ஊரு பிராண்டு

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய இரண்டு படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

நிதி அகர்வால் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களால் நிதி அகர்வாலுக்கும் கோவில் கட்டி பாலாஅபிஷேகம் நடத்தப்பட்டது.

நடிகைகள் படத்தில் நடிப்பதை காட்டிலும் விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால் விளம்பரங்களில் குறுகிய நேரத்திலேயே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அதேபோல் நிதி அகர்வாலும் மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.

நிதி அகர்வால் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல பிராந்தி நிறுவனத்தின் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் வெளிநாட்டு மதுவை ஊற்றி முகர்ந்து பார்த்து மதுவை நன்றாக பருகலாம், தற்போது இந்த மதுபானம் ஒரு அழகான கோப்பையுடன் வருகிறது என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஹன்சிகா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நடிகைகள் இது போன்ற மதுபான விளம்பரங்களில் நடித்து சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது நிதி அகர்வால் மதுபான விளம்பரத்தில் நடித்து இருப்பதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இளைஞர்களை தவறான செயலுக்கு தூண்டுவதாக நிதி அகர்வால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நிதி அகர்வால் மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

Contact Us