வீட்டை விட்டு ஓடிய மனைவியை போஸ்டர் அடித்து தேடும் கணவர்:

 

கொல்கத்தாவில் வீட்டை விட்டு ஓடிப்போன மனைவியை, அவரது கணவர் போஸ்டர் அடித்து தேடி வருவதுடன்,  தகவல் கொடுப்பவருக்கு 5 ஆயிரம் இந்திய ரூபா கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தின் படி மேற்கு வங்கம் பிங்காலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவர் வேலை காரணமாக ஐதராபாத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவரது மனைவி இவரது பெற்றோர்களுடன் பிங்காலாவிலேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இரவு முதல் தனது மனைவியை காணவில்லை என தகவலறிந்த இவர், பதறியடித்துக்கொண்டு ஊருக்கு சென்று விசாரித்த போது, இவர் வீட்டின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது. அதன் மூலமே தன் மனைவி வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியேறியுள்ளார் என்பது தெரிந்துள்ளது.

பின்னர் நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த அன்று இவர் பகுதிக்கு நம்பர் பிளேட் இல்லாத நானோ கார் ஒன்றுவந்து சென்றது தெரியவந்துள்ளது. அதில் தான் தன் மனைவி சென்றிருக்ககூடும் என முடிவெடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவர் கூறும் போது, மனைவி படிப்பறிவு இல்லாதவர். தான் வெளியூருக்கு வேலைக்கு செல்வதால் மனைவி மற்றும் குழந்தையுடன் பேசுவதற்கு ஒரு செல்போனை வாங்கி கொடுத்தேன். அந்த செல்போனில் இவர் இரவு முழுவதும் யாருடனோ பேசியுள்ளார். இதை கணவரின் பெற்றோர் கவனித்துள்ளனர். அவர்கள் என்னிடம் தான் பேசுவதாக நினைத்துள்ளனர்.

இது குறித்து தான் செல்போனில் பேசவில்லை எனறு கூறியதும் தன் மனைவிக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் சமூகவலைத்தளங்களில் தன் மனைவி வேறு ஒரு நபருடன் ஓடிப்போனதை குறிப்பிட்டு அவர் படிப்பறிவு இல்லாமல் இப்படி சென்றுவிட்டார்.

அவரை கண்டால் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தில் தகவல்தெரிவிக்கும் படியும். அவரை மன்னித்து அவருடன் வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன் மனைவி வேறு நபருடன் சென்றார் என்பது தெரிந்தும், கணவர் தன்னை ஏமாற்றிய மனைவியுடனேயே சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பது பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

Contact Us