Shooting Spot-ல் போதையில் அட்டகாசம் செய்யும் வாரிசு நடிகர் ..! மனம் நொந்து போகும் தயாரிப்பாளர்கள்…!

தமிழ் சினிமாவில் தற்போது, வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம் வரத்துவங்கியுள்ளது. சினிமாவில் நடிப்பதற்கு நிறம் முக்கியமல்ல, திறமைதான் முக்கியம் எனக் காட்டி சாதித்தவர் தான் நடிகர் முரளி. இதயம், வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.இவருடைய மகன் அதர்வா, பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் பரதேசி, ஈட்டி போன்ற படங்களில் நடித்து தனிப்பட்ட திறமையால் முன்னேறியவர்.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, சமீபகாலமாகவே, படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லையாம், சில நேரங்களில் படப்பிடிப்பிற்கு வராமலேயே இருந்து விடுகிறாராம். இதை தவிர படபிடிப்பு தளத்தில் போதையில் இருப்பது, நடிகைகள் பின்னால் சுற்றி ஜொள்ளு விட்டு திரிவது போன்றும் இருந்து வருகிறாராம். இதனை கேள்விப்பட்ட சில தயாரிப்பாளர்கள், பட வாய்ப்பு அளிக்க தயங்கி வருகிறார்களாம். இது போன்று நடப்பது தொடர்ந்தால், அதர்வா சினிமாவில் நீடிப்பது சற்று சந்தேகம் தான்…

Contact Us