என்னையா இப்படி கிளம்பிட்டீங்க: வீட்டுக்கு அன்பளிப்பாக வரும் USB மொத்தமும் மால்வேர் வைரஸ்: தொட்டா கெட்டோம்!

இணைய பயன்பாடு என்பது அதிகரிக்க அதிகரிக்க அதன் மீதான தீங்கு செயல்களும் அதிகரித்து வருகின்றன. தரவுத் திருட்டுகள் ஹேக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விழிப்புடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருப்பது என்பது தற்போது சிறந்த வழியாகும். ஒருவேலை நீங்கள் தீங்கிழைக்கும் பயன்பாடுகளால் நிரப்பப்பட்ட யூஎஸ்பி ஸ்டிக்கை பரிசாக பெற்றால் என்ன செய்வீர்கள்? சமீபகாலமாகவே அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களில் இதுதான் தொடர்ந்து நடக்கிறது. இதையடுத்து இதுகுறித்து FBI எச்சரிக்கை விடுத்துள்ளது. யூஎஸ்பி ஸ்டிக்குகளில் மால்வேர்களை நிறப்பி அனுப்புவது, பிற பயன்பாடுகளில் மூலம் வைரஸ்களை நுழைத்து அதன்மூலம் ஹேக்கர்கள் உள்நுழைவது என்பது சமீப கால தந்திரமாகவே இருக்கிறது. இருப்பினும் இந்த முறை குறைந்துவிட்டதாக நம்பப்பட்டு வரும் நிலையில் பல்வேறு வகையில் தந்திரமாக ஹேக்கர்கள் தரவுகளை திருட முயன்று வருகின்றனர். இதுகுறித்து FBI எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு, போக்குவரத்து, காப்பீடு மற்றும் பிற சேவைத் துறைகளில் பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஒரு ஹேக்கர் குழு யூஎஸ்பி ஸ்டிக்கில் மால்வேரை நிரப்பி பரிசாக அனுப்பவாத FBI எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த யூஎஸ்பி ஸ்டிக்கை பரிசாகப் பெறும் பணியாளர்கள் ரேன்ஸம்வேர் தாக்குதல்கள் அல்லது தரவுத் திருட்டுக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்திய மால்வேர் தாக்குதல்களுக்கு பின்னால் இருக்கும் குழு எஃப்ஐஎன்7 என அழைக்கப்படுகிறது.

பரிசுப் பொருட்களை சந்தேகம் இல்லாத வகையில் இந்த குழு அனுப்புகிறது. அதாவது மால்வேர் கொண்ட யூஎஸ்பி ஸ்டிக்கை அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையால் அனுப்பப்படுவது போல் தனித்துவமாக வழங்கப்படுகிறது. அதேபோல் அதில் கோவிட் 19 வழிகாட்டுதல்கள் குறித்த முக்கியமான தரவுகளும் தகவல்களும் அதில் இருக்கின்றன. மேலும் இந்த ஆர்டர்கள் பல சமயங்களில் அமேசான் மூலமாகவும் அனுப்பப்படுகிறது. ஆகஸ்ட் 2021 முதல் இந்த மோசடி பல மாதங்களாக நடந்து வருவதாக எஃப்பிஐ குறிப்பிட்டுள்ளது. FIN7 குழு இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருடியதாகவும் இது பிளாக் மேட்டர் மற்றும் டார்க்சைட் போன்ற ரேன்சம்வேர் உடன் இது இணைக்கப்பட்டுள்ளதாக எஃப்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மால்வேர்கள் நம்மை பல கட்டம் முன்னோக்கி தீங்கிழைப்பிற்கு உள்ளாக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சம்பந்தம் இல்லாமல் நமக்கு கிடைக்கும் பென்டிரைவ்களை தங்கள் கணினிகளில் மாட்டுவதா என்ற கேள்விகள் பலரிடம் வரலாம். ஆனால் FBI அறிக்கையின்படி மதிப்புமிக்க நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் இவ்வாறு செய்திருக்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் பென் டிரைவ் உள்ளே என்ன இருக்கிறது, இதை சேமிப்பதற்கு பயன்படுத்த முடியுமா என்பதை அறிய இதை பெற்றவர்கள் ஆர்வமாக இருந்திருக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நியர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் பரிசுகளை ஏற்க வேண்டாம். ரேன்சம்வேர் போன்ற தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாக்க அந்நியர்களிடம் இருந்து வரும் பரிசுகளை ஏற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீங்கள் வாங்கும் கேஜெட் உண்மையானதாக இருக்கிறது, அதில் ஏதேனும் தீங்கிழைக்கும் பொருட்கள் இருக்கிறதா என்பதை குறுக்கு சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது. அறியாமல் கிடைக்கப்படும் பரிசுகள் உங்களுக்காக உங்களுக்குடையவர்கள் தான் அனுப்பினார்களா என்பதை அவர்களுக்கு தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த பரிசுகள் எங்கிருந்து வந்தது என உங்களுக்கு தெரியாவிட்டால் அதை அப்படியே விட்டுவிட்டு அதிகாரிகளிடம் புகாரளிப்பது நல்லது. அதேபோல் எந்த ஒரு பயன்பாடுகளையும் பயன்படுத்தும் போது அதை நன்கு சோதித்து அதன் மதிப்பீடு பார்த்து பயன்படுத்தவது மிகச் சிறந்தது.

Contact Us