மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் விக்னேஸ்வரன் (27). இவர் விருத்தாசலம் அருகே பூவனூர் ரயில் நிலையத்துக்கும் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய விசாரணையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஸ்வரனுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு விக்னேஸ்வரன் தனிமையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த விக்னேஸ்வரன் பூவனூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

 

இது பற்றி தகவல் அறிந்த விருத்தாச்சலம் இருப்புப் பாதை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அசோகன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Contact Us