Posted in

தமிழகத்தில் மேலும் அதிர்ச்சி 13 வயது சிறுமியிடம் 3 பேர் அத்துமீறல்- சிங்கப் பெண் பாய்கிறது !

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியாம்பட்டி கிராமம் புதூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் ஏரிப் பகுதிக்கு அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் இதைப் பார்த்து சத்தம்போடவே, மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் முருகன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் உடனடியாக ஜலகண்டாபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜலகண்டாபுரம் போலீசார், பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போதுதான் தோண்டத் தோண்ட பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின. கடந்த இரண்டு மாதங்களாகவே அதே பகுதியைச் சேர்ந்த முருகன், ராஜேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகிய மூன்று நபர்களும் தனக்கு அடிக்கடி தின்பண்டங்களை (Snacks) வாங்கிக் கொடுத்து ஏரிப் பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டதாக அந்தச் சிறுமி போலீசாரிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமி கொடுத்த பகீர் வாக்குமூலத்தை அடுத்து, அரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காம மிருகங்களான முருகன், ராஜேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்திய போலீசார், மேல் விசாரணைக்காக மூன்று குற்றவாளிகளையும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தின்பண்டங்கள் மற்றும் மிட்டாய்களைக் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, இரண்டு மாதங்களாக 13 வயது சிறுமியை ஏரிப் பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்த இந்தச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.