Posted in

மகாராஷ்டிராவில் தவெக அரசின் Anti-Drug படை அதிரடி! சென்னையை உலுக்கிய நைஜீரிய டீலர் கைது!

தமிழகத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதே தனது அரசின் முதன்மை இலக்கு என அறிவித்து, ஆட்சேற்ப்புக்குப் பின் ‘மாவட்ட வாரியான போதைப்பொருள் தடுப்புப் படை’ (Anti-Narcotics Task Force) பிரிவை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உருவாக்கினார். இந்தப் புதிய சிறப்புப் படை இன்னும் முழுமையாக அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவைக் காணாத நிலையிலும், அதற்குள் தங்களது அசாத்தியப் புலனாய்வு மூலம் மாநிலம் கடந்த ஒரு மெகா ஆபரேஷனைச் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. சென்னையில் போதைப்பொருள் சப்ளை செய்துவிட்டு மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த முக்கியக் கடத்தல் புள்ளியைத் தமிழக போலீஸ் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ளது.

பாலிமர் நியூஸ் (Polimer News) செய்தியாளர் கதிரவன் வழங்கிய நேரடித் தகவலின்படி, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டப் போதைப்பொருள் தடுப்புப் படையினர் கடந்த ஜூன் 20 அன்று நடத்திய சோதனையில் சங்கீதா, சிரஞ்சேவி, ஜான் ஆகிய மூன்று சில்லறை வியாபாரிகளை 30 கிராம் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளுடன் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் இருக்கும் முக்கியக் குற்றவாளியான சங்கீதாவின் கணவர் சண்முகம் என்பது தெரியவந்தது. சண்முகம் போலீசுக்குத் தப்பி மகாராஷ்டிர மாநிலம் ஊஞ்சு (Unju) பகுதியில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் தனிப்படையினர் உடனடியாக மகாராஷ்டிராவிற்கு விரைந்து, அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சண்முகத்தைச் சுற்றி வளைத்து மாஸாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து சர்வதேசச் சந்தையில் பல லட்சம் மதிப்புள்ள 350 கிராம் உயர்தர ‘மெத்’ (Meth) போதைப்பொருள், 5 கிராம் எம்.டி.எம்.ஏ (MDMA), எல்.எஸ்.டி ஸ்டாம்புகள் (LSD Stamps) மற்றும் ஓஜி கஞ்சா (OG Ganja) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்த சண்முகம், பெங்களூரு சென்ற போது நைஜீரியக் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி, சென்னைக்குச் சொகுசுப் பேருந்துகள் மூலம் வீரியமிக்கச் செயற்கை போதைப்பொருட்களைக் கடத்தி வந்த அதிர்ச்சிப் பின்னணி அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சண்முகத்தைச் சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படையினர், தற்பொழுது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் “ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” மாரத்தானை முதல்வர் விஜய் தொடங்கி வைத்த அதே தினத்தில், அவர் அறிவித்த தனிப்படை மகாராஷ்டிராவில் வைத்து இத்தகைய பெரிய டீலரைக் கைது செய்து தனது ‘முதல் கணக்கைத்’ தொடங்கியிருப்பது தமிழகக் காவல் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.