அந்த 17 வயது பிரிட்டிஷ் சிறுமிக்கு தெரியாது, தனக்கு பின்னால் ஒரு ஓநாய்க் கூட்டம் பின்தொடர்கிறது என்று. நியூகேஸில் (Newcastle) நகரின் இருண்ட வீதிகளில், மிகத் திட்டமிட்ட ‘குரூமிங்’ (Grooming) வலைப்பின்னல் வீசப்பட்டது. சிகரெட்டுகளும், வோட்கா (Vodka) மதுபாட்டில்களும் அவளுக்கு ஆசைகாட்டப்பட்டு, அவளது சுயநினைவு மெல்ல மெல்ல மழுங்கடிக்கப்பட்டது. ஒரு பாதுகாப்பற்ற குடியிருப்பிற்குள் அவளைத் தனியாக வரவழைத்த அந்த ஆப்கானிய அகதிகள் கும்பல், அவளது நிலையைப் பயன்படுத்தி கொடூரமான கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சியில் (Gang-rape) ஈடுபட்டது. விடிந்ததும் தங்களின் கொடூர முகம் வெளிப்பட்டு, பிரிட்டன் போலீசாரிடம் சிக்கப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்த வேட்டைக்காரர்கள், உடனடியாக நாட்டை விட்டே தப்பியோட நள்ளிரவில் ஒரு மாஸ்டர் பிளான் போட்டனர்.
பிரிட்டன் உளவுத்துறையும், நார்தம்பிரியா போலீசாரும் (Northumbria Police) களமிறங்கியபோது, குற்றவாளிகள் நியூகேஸில் எல்லையைக் கடந்து, இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை துறைமுகத்தை நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற ஒரு மாபெரும் சரக்கு லாரியின் (Commercial Lorry) பின்பக்க ரகசியப் பெட்டிக்குள் தங்களைப் பூட்டிக்கொண்டு, இங்கிலீஷ் சேனல் கடல்வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தப்பித்து, நிரந்தரமாக மறைந்துவிட அவர்கள் முயன்றனர். ஆனால், தங்களின் பாக்கெட்டுகளுக்குள் இருந்த ஒரு சிறிய எலக்ட்ரானிக் கருவிதான் தங்களை மரணப் பொறியில் தள்ளப்போகிறது என்பதை அவர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். அதுதான் அவர்களின் மொபைல் போன்கள்!
பிரிட்டன் சைபர் க்ரைம் போலீசாரின் ஆக்ரோஷமான புலனாய்வு இங்குதான் ஹாலிவுட் பட பாணியில் தொடங்கியது. தப்பியோடியவர்களின் மொபைல் எண்களைக் கண்டறிந்த டிஜிட்டல் நிபுணர்கள், உடனடியாக ‘செல் டவர் டிரிப்பிள்-ஆங்கிள்’ (Cell Tower Triangulation) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். அதாவது, ஒரு மொபைல் போன் நகரும் போது, அது கடந்து செல்லும் மூன்று வெவ்வேறு மொபைல் கோபுரங்களின் சிக்னல் வலிமையைக் கணக்கிட்டு, அவர்கள் இருக்கும் துல்லியமான இடத்தை (X, Y கோஆர்டினேட்ஸ்) நொடிக்கு நொடி வரைபடமாக்கினர். லாரி எந்த நெடுஞ்சாலையில், எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை, அந்த போன்களின் IMEI எண்கள் மற்றும் மொபைல் டேட்டா பாக்கெட்டுகள் (Data Packets) மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறை திரைகளில் நேரலையாகக் கண்காணிக்கப்பட்டது.
சர்வதேச பிடியாணை (International Warrant) பிறப்பிக்கப்பட்டு, பிரெஞ்சு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (French Authorities) பிரிட்டன் போலீஸ் அவசர சிக்னல்களை அனுப்பியது. ஐரோப்பிய மண்ணுக்குள் அந்த லாரி நுழைந்த அடுத்த சில நிமிடங்களில், பிரெஞ்சு அதிரடிப்படையினர் அந்த லாரியை நடுரோட்டில் சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் லாரியின் பின்பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டபோது, உள்ளே இருட்டில் பதுங்கியிருந்த அந்த ஆப்கான் மிருகங்கள், தங்களை எப்படி போலீஸ் கண்டுபிடித்தது என்று தெரியாமல் உறைந்து போயின. உடனடியாகக் கைது செய்யப்பட்டு, இங்கிலாந்திற்குத் தூக்கி வரப்பட்ட அந்தக் கும்பலுக்கு, நியூகேஸில் நீதிமன்றம் (Newcastle Crown Court) தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கி, சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது!