Posted in

விஜய் வணக்கம் வைத்தும் அவமானப்படுத்திய ராதிகா- கையை கட்டிக் கொண்டு செய்த செயல்

விஜய் ராதிகா உறவு என்பது நேற்று இன்று அல்ல. விஜய் அவர்களை 14 வயதிலிருந்து ராதிகாவுக்குத் தெரியும். இவர்கள் இணைந்து படம் நடித்தும் உள்ளார்கள். ஆனால், என்னதான் இருந்தாலும் தற்போது தமிழக முதல்வராக விஜய் உள்ளார். வயதில் சிறியவர் என்றாலும், பதவிக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும். சுமார் 2 கோடி மக்கள் தமது ஆணையை விஜய்க்கு வழங்கியுள்ளார்கள். ஆனால், விஜய் வணக்கம் வைத்தும், ராதிகா கையை கட்டிக் கொண்டு நின்ற விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

பாக்யராஜ் அவர்கள் திடீரென மாரடைப்பால் இறந்ததைக் கேள்விப்பட்ட, முதல்வர் விஜய் அவர்கள், தனது பணிகளை அப்படியே போட்டுவிட்டு உடனடியாகக் கிளம்பி, பாக்யராஜ் பூத உடல் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கே ஏற்கனவே நடிகை ராதிகா அவர்கள், பாக்யராஜ் மனைவி பூர்ணிமா பக்கமாக நின்றுகொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் விஜய் அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் வணக்கம் வைக்க, அங்கே நின்றவர்கள் அனைவரும் பதிலுக்கு வணக்கம் வைத்தார்கள், ராதிகாவைத் தவிர.

எப்படி பாரதிராஜா வீட்டில் நின்றாரோ அதே பாணியில் மிகவும் விறைப்பாக, முகத்தை மிகவும் அகோரமாக வைத்துக்கொண்டு அவர் அங்கே நின்றிருந்தார். பாரதிராஜா இறந்த வீட்டில்கூட இதே பாணியில் தான், ராதிகா நடந்துகொண்டார். தற்போது பாக்யராஜ் இறந்த வீட்டிலும் அதே பாணியில் தான் நடந்துகொண்டார். இதேவேளை முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்து வந்த ராதிகாவின் கணவர் சரத்குமார், விஜய் அங்கே வந்தவேளை மாயமாக மறைந்துவிட்டார்.

விஜயை முதலில் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல சரத்குமார் நின்றுவிட்டுச் சட்டென மறைந்துவிட்டார். பின்னர் விஜயை உள்ளே அழைத்துச் சென்று, பின்னர் அவர் புறப்படும்போது வெளியே வரை வந்து விஜயை வழியனுப்பி வைத்தவர், நடிகர் பார்த்திபன் தான். ராதிகாவும் சரத்குமாரும் இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்? விஜய் முதலமைச்சர் ஆன உடனே, பல முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள், பலர் சென்று விஜயைப் பார்த்து நேரடியாகப் பாராட்டியும் வருகிறார்கள். இதனை ராதிகா இதுவரை செய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்…