Posted in

மக்களே உதவி செய்யுங்க!: ₹500  பொதுமக்கள் இணையப் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைநீர் வெள்ளப் பெருக்கைத் தடுக்கவும் முன்னெடுக்கப்படும் ₹500 கோடி மதிப்பிலான நீர்நிலைகள் சீரமைப்புத் திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK)பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் கண்மாய்களைத் தூர்வாரிச் சீரமைக்கும் பணிகள் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் உபரி நீர் வீணாகாமல் சேமிக்கவும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகாமல் தடுக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம், வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ள மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பாகப் பேசிய புஸ்ஸி ஆனந்த், அரசின் கட்டமைப்பு முயற்சிகளோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் கரம் கோர்த்தால் மட்டுமே நீர்நிலைகளைப் பூரணமாகப் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். “மக்களே முன்வந்து உதவி செய்ய வேண்டும்; தங்களது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தவும் சீரமைக்கவும் முன்வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தவெக தோழர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் இத்தகைய சமூகநலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நிலத்தடி நீரைக் காக்கவும், மழைநீர் சேமிப்பை உறுதி செய்யவும் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகப் பணிகளை விரைந்து முடிப்பதே இப்போதைய முதன்மை இலக்கு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.