ஈரானில் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிய மக்கள் மீது அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான படுகொலைகள் மற்றும் கொடூரத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் உண்மை வீடியோ ஆதாரங்கள் கசிந்து சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானில் நிலவும் பொருளாதாரச் சீர்குலைவு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையைத் தணிக்க இணையச் சேவைகளை முடக்கிச் சர்வதேச உலகிற்குத் தகவல் எட்டாதவாறு ஈரான் அரசு முட்டையிட்ட நிலையில், தற்போது அங்கிருந்து கசிந்துள்ள நேரடி வீடியோ பதிவுகள் ஈரானிய ஆட்சியாளர்களின் இரக்கமற்ற கொடூர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளன.
தெஹ்ரானின் முக்கிய மருத்துவப் பிரேதப் பரிசோதனை மையங்கள் (Kahrizak Forensic Centre) மற்றும் திறந்தவெளி மைதானங்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் உடல்கள் அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புப் படையினர் நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும், முகத்தை இலக்கு வைத்துச் சிறு துகள்கள் கொண்ட ‘ஷாட்கன்’ தோட்டாக்களைப் பயன்படுத்தியதிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக உரிமையியல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஐநா சபை ஈரானிய அரசின் இந்த மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இணைய முடக்கத்தையும் மீறி வெளியேறியுள்ள இந்த ஆதாரப் பதிவுகள், ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் நேரடிப் படுகொலைகளைப் படம்பிடித்துள்ள நிலையில், கொடூர குற்றங்களைச் செய்த அதிகாரிகள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.