Posted in

இஸ்ரேல் ராணுவத் தளபதி எயால் சமீர் – நெதன்யாகு இடையே கருத்து வேறுபாடு: வெளியானது பின்னணி!

இஸ்ரேலில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சில ராணுவ நடவடிக்கைகளுக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சமீர் கவலை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயங்களுக்காக அரசியல் தலைமை இந்த விவகாரத்தைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தில், முறையான எழுத்துப்பூர்வ சட்டப்பூர்வ அனுமதியை அவர் கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த அக்டோபர் 7 சம்பவங்களைத் தொடர்ந்து ஹெர்சி ஹலேவி ராஜினாமா செய்ததை அடுத்து, 2025 மார்ச் மாதத்தில் எயால் சமீர் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். கடந்த 2012 முதல் 2015 வரை பிரதமர் நெதன்யாகுவின் ராணுவச் செயலாளராகப் பணியாற்றிய எயால் சமீர், பின்னர் தெற்கு பிராந்தியத் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்துள்ள பிரதமர் நெதன்யாகு, ராணுவத் தளபதியுடன் எந்தவொரு மோதலோ அல்லது கருத்து வேறுபாடோ இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். எனினும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அரசியல் தலைமைக்கும் இடையே எழுந்துள்ள இந்த மோடல் போக்கு ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

ஈரான் உடனான மோதல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் அடுத்தகட்ட முடிவுகள் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. இராணுவத் தலைமை மற்றும் அரசுக்கு இடையிலான இந்தச் சூழல் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.