Posted in

பறக்கும் கார் உருவாக்கி அசத்திய உத்தராகண்ட் இளைஞர் ரவி தம்டா!

உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்டா, முறையான பொறியியல் கல்வி இன்றி 13 ஆண்டுகள் இணைய வழியில் கற்று மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் கார் மாதிரியை (Prototype) உருவாக்கியுள்ளார். ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ (HAPIDA SKYNeX) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஒரு நபர் பயணிக்கும் வாகனம், செங்குத்தாக எழும்பித் தரையிறங்கும் (VTOL) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

அல்மோராணுவ ஹெலிபேடில் நடத்தப்பட்ட இதன் முதற்கட்டப் சோதனை ஓட்டத்தில், இவ்வாகனம் சுமார் ஒரு நிமிடம் வான்வெளியில் பறந்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. மலைப் பகுதிகளில் நிலவும் கரடுமுரடான பாதைகள் மற்றும் அவசர மருத்துவ தேவைகளின் போது ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டதாக ரவி தம்டா தெரிவித்துள்ளார்.

கலைப்பிரிவில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றுள்ள இவர், இணையதள தகவல்கள் மற்றும் சுய பரிசோதனைகள் மூலமாகவே இந்த தொழில்நுட்ப அமைப்பை வடிவமைத்துள்ளார். இச்சாதனையைப் பாராட்டிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரவி தம்டாவின் இந்த கண்டுபிடிப்பு இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும் எனப் வாழ்த்தியுள்ளார்.

தற்போது முதற்கட்ட சோதனை மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உயர்த்த அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்காலத்தில் இத் தொழில்நுட்பம் முறைப்படுத்தப்பட்டு மலைவாழ் மக்களின் அவசரப் போக்குவரத்து தேவைகளுக்குப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.