தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 18ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்துச் கவுரவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட விழாவில் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது தொகுதிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த இரண்டாம் கட்ட நிகழ்விலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதறகளைப் பெற உள்ளனர்.
கல்வி மற்றும் சமூக நலனில் மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கட்சித் தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் இந்த விழா சிறப்பான முறையில் நடத்தப்படவுள்ளது. தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த கல்வி விருது விழாக்களுக்கு மாணவர்களிடையே மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த விழாவைத் தொடர்ந்து மேலும் பல கட்டங்களாக மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தத் தவெகவினர் திட்டமிட்டுள்ளனர். வரவிருக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.