Posted in

பிரெக்சிட் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுடன் இணைய பிரதமர் ஆன்டி பர்ஹாம் முயற்சிக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

பிரித்தானியப் பிரதமர் ஆன்டி பர்ஹாம் ஐரோப்பிய யூனியனுடன் (EU) உள்ள உறவுகளை மேம்படுத்தி மீண்டும் இணைய விரும்பும் திட்டங்களுக்குத் தங்களது எதிர்ப்பைத் தொழிற்சங்கத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பிரெக்சிட் நடவடிக்கைக்குப் பிறகு நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்துள்ளதாகக் கூறிய பர்ஹாம், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

தொழிற்சங்கங்கள் ஆளும் தொழிவிற்க்கட்சியை ஆதரித்த போதிலும், ஐரோப்பிய யூனியனுடன் மீண்டும் இணைவது அல்லது முந்தைய ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வது குறித்துப் பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தயக்கம் காட்டி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் நெருக்கமான வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்குச் செல்வது தொழிலாளர் நலன்களைப் பாதிக்கும் என்றும், முந்தைய முடிவுகளில் இருந்து பின்னோக்கிச் செல்ல முடியாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரதமரின் இந்த நிலைப்பாடு ஆளும் கட்சிக்குள் மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவளிக்கும் முக்கியத் தொழிற்சங்க அமைப்புகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய யூனியனுடன் எந்தெந்த விவகாரங்களில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்துத் தொடர் ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், தொழிற்சங்கங்களின் இந்த எதிர்ப்பு அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் நடைபெறவுள்ள வரவிருக்கும் முக்கியச் சந்திப்புக்கு முன்பாக இந்த உள்நாட்டு அரசியல் குழப்பம் எழுந்துள்ளது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளிலும் பிரெக்சிட் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகளிலும் இந்தத் தொழிற்சங்க எதிர்ப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.